/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
4,142 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி
/
4,142 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி
ADDED : மே 28, 2025 12:56 AM
ஈரோடு, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை சார்பில், 4,142 பயனாளி களுக்கு, 5.75 கோடி ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவி வழங்கும் விழா ஈரோட்டில் நேற்று நடந்தது.
கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமை வகித்தார். நலத்திட்ட உதவிகளை வழங்கி, வீட்டு வசதி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் முத்துசாமி பேசுகையில், ''தொழிலாளர் துறை சார்பில் ஈரோடு மாவட்டத்தில் கடந்த நான்காண்டுகளில், 67,481 பதிவு பெற்ற அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு, 54.39 கோடி ரூபாய் மதிப்பில் நலத்திட்டம் வழங்கப்பட்டுள்ளது,'' என்றார். கட்டுமான
தொழிலாளர் களுக்கான வீட்டு வசதி திட்டத்தில், வீட்டுமனை வைத்திருந்தால் அவர்களே வீடு கட்ட நிதியுதவி, 35 பேருக்கு, குடியிருப்பு ஒதுக்கீடு, 156 பேருக்கு என, 4,142 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் பேசிய கட்டு மான தொழிலாளர் நலவாரிய தலைவர் பொன்குமார், ''கடந்த, 10 ஆண்டு கால அ.தி.மு.க., ஆட்சியில் எந்த திட்டமும் கொண்டு வரவில்லை. தி.மு.க., அரசு எட்டு திட்டங்களை அறிவித்து செயல்படுத்துகிறது,'' என்றார்.
நிகழ்வில் எம்.எல்.ஏ.,க்கள் வெங்கடாசலம், சந்திரகுமார், நலவாரிய செயலர் ஜெயபாலன், தொழிலாளர் துறை இணை ஆணையர் மாதவன், உதவி ஆணையர் முருகேசன் உட்பட பலர் பங்கேற்றனர்.