/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
முகமூடி அணிந்து திருடியது வடமாநில தொழிலாளர்கள்?
/
முகமூடி அணிந்து திருடியது வடமாநில தொழிலாளர்கள்?
ADDED : நவ 29, 2025 01:35 AM
ஈரோடு, ஈரோடு மாநகராட்சி முத்தம்பாளையம் ஹவுசிங் யூனிட், ரயில் நகர் பகுதியில் கடந்த, 25ம் தேதி நள்ளிரவில் நான்கு பேர், முகமூடி அணிந்து, இரும்பு கம்பி உள்ளிட்ட ஆயுதங்களுடன் வீதிவீதியாக சுற்றினர். ஆளில்லாத வீடுகளை நோட்டமிட்டு, சுற்றுச்சுவர் ஏறி குதித்து திருட்டில் ஈடுபட்டனர்.
இதில் இரு வீட்டில் எட்டு பவுன் நகை, வெள்ளி பொருட்கள், 15,000 ரூபாய் திருடி சென்றனர். புகார் படி ஈரோடு தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர். இதனால் இப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
இதுபற்றி போலீசார் கூறியதாவது: முகமூடி அணிந்து திருட்டில் ஈடுபட்டோரின் செயல் 'சிசிடிவி' கேமராக்களில் பதிவாகி உள்ளது. வடமாநில தொழிலாளர், வடமாநில வாலிபர்களாக இருக்கக்கூடும் என்பதால், அவர்கள் தங்கியுள்ள பகுதிகளில் கண்காணித்து, விசாரணை நடத்தி வருகிறோம்.
இவ்வாறு கூறினர்.

