/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
வீட்டு வசதி வாரிய வணிக வளாகம் பயன்பாட்டுக்கு வருவது எப்போது?
/
வீட்டு வசதி வாரிய வணிக வளாகம் பயன்பாட்டுக்கு வருவது எப்போது?
வீட்டு வசதி வாரிய வணிக வளாகம் பயன்பாட்டுக்கு வருவது எப்போது?
வீட்டு வசதி வாரிய வணிக வளாகம் பயன்பாட்டுக்கு வருவது எப்போது?
ADDED : நவ 25, 2024 02:18 AM
ஈரோடு: தமிழக வீட்டு வசதி வாரியம் சார்பில், ஈரோடு சூரம்பட்டி நால்ரோட்டில், 16 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 3,002 சதுர மீட்டர் பரப்பளவில் வணிக வளாக கட்டடம் கட்டப்பட்டுள்ளது. கட்டடத்தின் முன் பகுதியில் நான்கு தளங்களும், பின்புறத்தில் ஆறு தளங்களும் கட்டப்பட்டுள்ளன. முன்புற பகுதியில் நான்கு தளங்களில், முதல் இரண்டு தளங்களில் ஆறு கடைகள், அதற்கு மேல் உள்ள இரு தளங்களில் வீட்டு வசதி வாரிய அலுவ-லகமும் அமைக்கப்பட்டுள்ளது.
பின்புறத்தில் கட்டப்பட்டுள்ள ஆறு தளங்களில் ஒவ்வொரு தளத்-திற்கும் தலா ஆறு குடியிருப்பு என 36 குடியிருப்பு அமைக்கப்-பட்டுள்ளது. இந்த குடியிருப்பு உயர் வருவாய் பிரிவு (எச்.ஐ.ஜி.,) வகையில் அனைத்து வசதிகளுடன் உள்ளது. கட்டுமான பணி முடிந்து ஆறு மாதங்களுக்கு மேலாகிவிட்டது. ஆனாலும் பயன்-பாட்டுக்கு கொண்டு வர, வீட்டு வசதி வாரியம் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டி வருகிறது. செயல்பாட்டுக்கு வராத கட்டடத்துக்கு கலைஞர் நுாற்றாண்டு கட்டடம் என்று பெயர் சூட்டியுள்ளனர். வணிக வளாகத்தை, பயன்பாட்டுக்கு கொண்டு வர மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து வீட்டு வசதி வாரிய அதிகாரி ஒருவர் கூறும்போது, 'கட்டடம் விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்' என்றார்.