/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கூலி உயர்வு ஜி.ஓ., எப்போது? கைத்தறி நெசவாளர் புலம்பல்
/
கூலி உயர்வு ஜி.ஓ., எப்போது? கைத்தறி நெசவாளர் புலம்பல்
கூலி உயர்வு ஜி.ஓ., எப்போது? கைத்தறி நெசவாளர் புலம்பல்
கூலி உயர்வு ஜி.ஓ., எப்போது? கைத்தறி நெசவாளர் புலம்பல்
ADDED : மே 31, 2025 06:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னிமலை: ஈரோடு மாவட்ட கைத்தறி நெசவாளர் சம்மேளன தலைவர் ராஜேந்திரன், தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: தமிழக கைத்தறி நெசவாளர்களுக்கு, 10 சதவீதம் கூலி உயர்வு, 10 சதவீத அகவிலைப்படி உயர்வு வழங்க, கைத்தறித்துறை அமைச்சர் நிதிநிலை கூட்டத்தொடரில் அறிவித்தார்.
ஆனால் அதற்கான அரசாணை இன்னும் வெளியிடவில்லை. அரசாணை வழங்கி ஊதிய உயர்வை நடைமுறைப்படுத்த வேண்டும். மேலும், கைத்தறி நெசவாளர்களுக்கான புதிய மருத்துவ காப்பீட்டு திட்டம் இதுவரை நடைமுறைக்கு வரவில்லை. இதையும் அமல்படுத்த நெசவாளர்கள் சார்பில் வலியுறுத்தி கேட்கிறோம். இவ்வாறு கடிதத்தில் தெரிவித்துள்ளார்.