/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
எங்கெங்கு கடைகள் அமைக்கலாம்? சாலையோர வியாபாரிகளுக்கு அறிவிப்பு
/
எங்கெங்கு கடைகள் அமைக்கலாம்? சாலையோர வியாபாரிகளுக்கு அறிவிப்பு
எங்கெங்கு கடைகள் அமைக்கலாம்? சாலையோர வியாபாரிகளுக்கு அறிவிப்பு
எங்கெங்கு கடைகள் அமைக்கலாம்? சாலையோர வியாபாரிகளுக்கு அறிவிப்பு
ADDED : செப் 09, 2025 02:19 AM
காங்கேயம், காங்கேயம் நகராட்சி பகுதியில் தினசரி மார்க்கெட் கடைகள், காங்கேயம் வாரச்சந்தை, வியாழன் சந்தை செயல்பட்டு வருகிறது. மேலும் காங்கேயம் சாலையோர பகுதியில் பல்வேறு இடங்களில் சாலையோரம் கடைகளை அமைத்து வியாபாரம் செய்கின்றனர்.
இதை முறைப்படுத்த நகராட்சி நிர்வாகம் முடிவு செய்து, செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது. அதன் விபரம்: சென்னிமலை ரோடு பஸ் நிலையம் ரவுண்டானா முதல் தீயணைப்பு நிலையம் வரை, பாளையங்கோட்டை ரோடு போக்குவரத்து டிப்போ முதல் ஆண்டவர் மரம் மில் வரை, மெயின் ரோடு பஸ் நிலைய ரவுண்டானா முதல் கரூர் ரோடு ரவுண்டானா வரை, கரூர் ரோடு நெடுஞ்சாலை, கோயம்புத்துார் ரோடு நெடுஞ்சாலை, தாராபுரம் ரோடு ரவுண்டானா முதல் களிமேடு வரை கடை அமைக்க கூடாது.
கடை அமைக்கும் இடங்கள்
திருப்பூர் ரோடு சைக்கிள் ஸ்டாண்ட் முன்புறம், பழைய கோட்டை ரோடு ஈஸ்வரன் கோயில் முன்புறம், திருப்பூர் ரோடு சிவசக்தி விநாயகர் கோவில் முதல் வாய்க்கால் மேடு வரை, தாராபுரம் ரோடு களிமேடு முதல் அகிலாண்டபுரம் வரை, பழைய கோட்டை ரோடு ஆண்டவர் மரம் மில் முதல் எல்லன் கோ ரைஸ் மில் வரை, காமராஜ் நகர் மெயின் ரோடு, தாராபுரம் ரோடு களிமேடு முதல் அரசு மேல்நிலைப்பள்ளி வரை, சென்னிமலை ரோடு தீயணைப்பு அலுவலகம் முதல் என்.எஸ்.என் நகர் வரை, அய்யாசாமி நகர் காலனி ரவுண்டானா முதல் அய்யாசாமி நகர் காலனி மேற்கு தெரு வரை கடைகள் அமைக்கும் பகுதிகளாகும். இதை மீறுவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என காங்கேயம் நகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.