/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவது யார்? முதல்வர் ஸ்டாலின் இன்று கட்சியினருடன் முக்கிய ஆலோசனை
/
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவது யார்? முதல்வர் ஸ்டாலின் இன்று கட்சியினருடன் முக்கிய ஆலோசனை
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவது யார்? முதல்வர் ஸ்டாலின் இன்று கட்சியினருடன் முக்கிய ஆலோசனை
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவது யார்? முதல்வர் ஸ்டாலின் இன்று கட்சியினருடன் முக்கிய ஆலோசனை
ADDED : டிச 19, 2024 07:19 AM
ஈரோடு: 'ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் எந்த கட்சி போட்டி, யார் வேட்பாளர் என்பது குறித்து முதல்வர் ஸ்டாலின் இன்று கட்-சியினருடன் ஆலோசிப்பார்' என, தி.மு.க., மூத்த நிர்வாகிகள் தெரிவித்தனர்.
கடந்த, 2021 சட்டசபை தேர்தலில், தி.மு.க.,கூட்டணியில், ஈரோடு கிழக்கில் காங்., சார்பில் திருமகன் ஈவேரா போட்டியிட்டு வென்றார். உடல் நலக்குறைவால், 2023 ஜன., 4ல் இறந்தார். அடுத்து நடந்த இடைத்தேர்தலில், மீண்டும் காங்., போட்டியி-டவும், திருமகன் ஈவேராவின் தந்தையும், தமிழக காங்., முன்னாள் தலைவரான இளங்கோவனை நிறுத்த முதல்வர் ஸ்டாலின் தீர்மானித்தார்.
உடல் நலக்குறைவு, மகன் இறப்பு போன்ற காரணங்களை கூறி, இளங்கோவன் தவிர்த்தபோதும், உள்ளூர் அமைச்சரான முத்து-சாமி உட்பட பலரும் வலியுறுத்தியதால் அவரையே நிறுத்தி, பிப்., 27 தேர்தலில் எம்.எல்.ஏ.,வானார். அவரும் உடல் நலக்கு-றைவால் கடந்த, 14ல் இறந்தார். கடந்த, 17ல், ஈரோடு கிழக்கு காலி தொகுதியாக அறிவிக்கப்பட்-டது. பிப்ரவரியில், டில்லி சட்டசபை தேர்தல் நடக்கும் நிலையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலும் நடத்தப்படும் என்ற தகவல் பரவியதால், பல்வேறு அரசியல் கட்சியினர் விவா-தித்து வருகின்றனர்.இந்நிலையில், ஈரோட்டுக்கு இன்று முதல்வர் ஸ்டாலின் வரு-கிறார். பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று நாளை மதியம், சென்னை செல்கிறார். இந்த, 24 மணி நேர சுற்றுப்பயணத்தில், இடைத்தேர்தல் பற்றிய பேச்சுவார்த்தை நடக்க உள்ளதாக, தி.மு.க., மூத்த நிர்வாகிகள் தெரிவித்தனர்.அவர்கள் மேலும் கூறியதாவது:தமிழக காங்., முன்னாள் தலைவர் இளங்கோவன், அவரது மகன் திருமகன் ஈவேரா ஆகியோர் எம்.எல்.ஏ.,வாகி உடல் நலக்கு-றைவால் இறந்தது துரதிர்ஷ்டவசமானது. கூட்டணி விதிப்படி, இடைத்தேர்தல் என்றாலே, ஏற்கனவே போட்டியிட்ட கட்சிக்கே மீண்டும் வாய்ப்பு தருவது வழக்கம். இளங்கோவனின் இளைய மகன் சஞ்சய் சம்பத் பெயர், கடந்த இடைத்தேர்தலின் போதே, 90 சதவீதம் முன்மொழியப்பட்டது. உள்ளூர் அமைச்சர் முத்துசா-மியும், முதல்வர் ஸ்டாலினும், 'தி.மு.க.,வுக்காகவும், தங்களுக்கா-கவும் கூட்டணியில் குரல் கொடுக்க ஒருவர் வேண்டும்' என்ற நோக்கில், இளங்கோவனை நிறுத்தினர்.இளங்கோவன் இறந்ததால், மீண்டும் அதே கட்சி அல்லது அதே குடும்பத்துக்கா என்ற சர்ச்சை முன் நிற்கிறது. இருந்தும், ஈரோடு மாவட்ட காங்.,ல் சஞ்சய் சம்பத், மாவட்ட துணைத் தலைவர் ராஜேஷ் ராஜப்பா, தெற்கு மாவட்ட தலைவர் மக்கள்ராஜன், முன்னாள் மாவட்ட தலைவர் ஈ.பி.ரவி, மொடக்குறிச்சி முன்னாள் எம்.எல்.ஏ., ஆர்.எம்.பழனிசாமி போன்றோர் உள்ளனர்.அதேநேரம், 'தி.மு.க.,வுக்கே வாய்ப்பு வழங்குவோம்' என கட்சி மேலிடம் விரும்பி, காங்., தலைமையை சமரசம் செய்தால், தி.மு.க., மாவட்ட துணை செயலாளர் செந்தில்குமார், முன்னாள் எம்.எல்.ஏ., சந்திரகுமார், மாவட்ட நெசவாளர் அணி செயலாளர் சச்சிதானந்தம் ஆகியோர் பெயர் பட்டியலில் உள்ளது.ஈரோடு கிழக்கு தொகுதி, முதலியார் சமூகத்துக்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக முன்வைக்கப்படு-வதால், செந்தில்குமார், சந்திரகுமார் பெயர் முன்னிற்கும். இதில், தே.மு.தி.க.,வில் எம்.எல்.ஏ.,வாக இருந்து, 2016 சட்டசபை தேர்த-லின்போது கடைசி நேரம் தி.மு.க.,வில் இணைந்து, ஈரோடு கிழக்கு தொகுதி வழங்கப்பட்டு, தோல்வியை தழுவியவர் சந்திர-குமார். கடந்த, 2016 முதல் அவர் தி.மு.க.,வில் உள்ளார். செந்தில்-குமார் மற்றும் அவரது குடும்பத்தார் ஆரம்ப காலம் முதல், தி.மு.க.,வில் மட்டுமே உள்ளதுடன், தொகுதி மற்றும் மாவட்ட அளவிலும், முதல்வர் வரையிலான தொடர்பிலும் உள்ளார். இது மட்டுமின்றி, இடைத்தேர்தலில் செலவு செய்தல், ஒருங்கி-ணைத்தல், கடந்த இடைத்தேர்தலில் இளங்கோவன், 66,233 ஓட்டு வித்தியாசத்தில் வென்றதால், அதைவிட கூடுதல் ஓட்டு பெறும் வகையிலான ஒருவரை நிறுத்த வேண்டும் என, முதல்வர் விரும்புவார். இவை அனைத்தும் இன்று ஈரோடு வரும் முதல்வர் ஸ்டாலின், கட்சி நிர்வாகிகளிடம் ஆலோசித்து, குறைந்தபட்ச நிலைப்-பாட்டை, நிர்வாகிகளிடம் தெரிவித்து செல்வார்.இவ்வாறு கூறினர்.