/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கால்நடை காப்பீட்டில் ஆர்வம் காட்டாதது ஏன்'
/
கால்நடை காப்பீட்டில் ஆர்வம் காட்டாதது ஏன்'
ADDED : செப் 27, 2025 01:13 AM
ஈரோடு, ஈரோட்டில் வேளாண் குறைதீர் கூட்டம் நேற்று நடந்தது. இதில் கலெக்டர் கந்தசாமி தலைமை வகித்து பேசியதாவது: குளம், குட்டை, ஏரிகளில் குடிமராமத்து பணி செய்யப்படும். மழை காலம் துவங்குவதால், முன்னதாக எந்தெந்த பகுதியில் தேவை என விவசாயிகள் கூறினால், அரசிடம் தெரிவித்து அனுமதி பெற்று, மண்ணை அகற்றலாம்.
பஞ்சாயத்துக்கள் உட்பட உள்ளாட்சி அமைப்புகளில் பயன்பாட்டில் இல்லாத குப்பை வண்டிகளை பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்ட அளவிலான எனது ஆய்வில், பெரும்பாலான பகுதிகளில் கால்நடைகளை காப்பீடு செய்யவில்லை. மத்திய, மாநில அரசுகள் மானியமாக வழங்கியதுபோக, விவசாயிகள், 200 ரூபாய்க்குள்தான் செலுத்த வேண்டும். பேரிடரின்போது முழு இழப்பீடு கிடைக்கும்.
ஆடு வளர்ப்போர் இணைந்து ஆடு வளர்ப்போர் கூட்டுறவு சங்கத்தை உருவாக்கி, உறுப்பினராகுங்கள். நீங்களே கடன் பெற்று, பொருளாதார பயன் பெறலாம்.
பண்டிகை காலம் வருவதால், தடை செய்யப்பட்ட, பயன்பாட்டில் இல்லாத பிளாஸ்டிக் பொருட்கள் மாநகராட்சி உட்பட அனைத்து உள்ளாட்சி பகுதியிலும் அதிகமாக பயன்பாட்டுக்கு வரும். அவற்றை முழு அளவில் பறிமுதல் செய்து, நடவடிக்கை எடுக்க வேண்டும். பிற துறைகளும் இணைந்து அகற்றும் பணியை செய்ய வேண்டும். அகற்றப்படாமல் பிளாஸ்டிக் விற்பனை நடப்பது கண்டறிந்தால், சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு பேசினார்.
கூட்டத்தில் டி.ஆர்.ஓ., சாந்தகுமார், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) லோகநாதன், துணை இயக்குனர்கள் அருள்வடிவு, குருசரஸ்வதி உட்பட பலர் பங்கேற்றனர்.