/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஈரோட்டில் வெயில் அதிகரித்தது ஏன்? 'தழை' மாலை போட்டு வந்தவர் குமுறல்

ADDED : மே 27, 2025 01:50 AM
ஈரோடு, தமிழக எழுச்சி பேரவை மாநில தலைவர் பிரேம்நாத். கோவக்காய் தழையை மாலையாக போட்டுக்கொண்டு, கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று வந்தார். போலீசார் அனுமதி மறுத்து தடுத்து நிறுத்தியதால், தழையை வெளியே கழற்றி வைத்து சென்று மனு கொடுத்தார்.
அதன் விபரம்: ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஆட்சியில், ஈரோடு-கோபி இடையே நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி நடந்தது. இதேபோல் ஈரோடு-பவானி-மேட்டூர்-தொப்பூர் சாலை விரிவாக்க பணி நடந்தது. இதற்காக, ௫,௦௦௦ மரங்கள் வெட்டப்பட்டன.
ஈரோட்டில் வெயில் அதிகரிக்க மரங்கள் வெட்டப்பட்டதே முக்கிய காரணம். வெட்டப்பட்ட மரங்களுக்கு நிகராக மரங்கள் நடப்படவில்லை. நெடுஞ்சாலை துறையினர், 10 ஆயிரம் மரக்கன்றுகளை நட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார்.