/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ப.செ.பூங்கா சாலையில் ஆக்கிரமிப்பு அகற்றம் ஏன்? அமைச்சர் முத்துசாமி தகவல்
/
ப.செ.பூங்கா சாலையில் ஆக்கிரமிப்பு அகற்றம் ஏன்? அமைச்சர் முத்துசாமி தகவல்
ப.செ.பூங்கா சாலையில் ஆக்கிரமிப்பு அகற்றம் ஏன்? அமைச்சர் முத்துசாமி தகவல்
ப.செ.பூங்கா சாலையில் ஆக்கிரமிப்பு அகற்றம் ஏன்? அமைச்சர் முத்துசாமி தகவல்
ADDED : பிப் 17, 2024 07:26 AM
ஈரோடு : ஈரோடு கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் பகுதியில், மகளிர் திட்டத்தில், 'மதி சிறுதானிய உணவகம்' திறப்பு விழா நேற்று நடந்தது. கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமை வகித்தார்.
இதை திறந்து வைத்து வீட்டு வசதி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் முத்துசாமி கூறியதாவது:
ஈரோடு மாவட்டத்தில் மக்களுடன் முதல்வர் திட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீது, 30 நாட்களுக்குள் தீர்வு காண முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதன்படி மாவட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீது, தனித்தனியாக ஆய்வு செய்து தீர்வு காணப்பட்டு வருகிறது. இதுவரை மாவட்டத்தில், 14,006 மனுக்கள் பெறப்பட்டன. அதில், 9,479 மனுக்கள் ஏற்கப்பட்டன. மீதி, 4,353 மனுக்கள் காரண குறைபாட்டால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. 174 மனுக்கள் நிலுவையில் உள்ளன. தகுதியான மனுக்கள் மீது நடவடிக்கை எடுத்து, 3 கோடி ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மூலம் தாலிக்கு தங்கம் திட்டத்தில், 586 பயனாளிகளுக்கு, 2.41 கோடி ரூபாய் நிதியும், 2.79 கோடி ரூபாய் மதிப்பில் தங்கக்காசு வழங்கப்பட்டுள்ளது.
தவிர கடந்த வாரம் அமைச்சர் உதயநிதி ஈரோடு வந்தபோது, மக்களிடம் பெறப்பட்ட பல ஆயிரம் மனுக்கள் மீதும் தீர்வு காணப்பட்டு வருகிறது. ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா சாலையோரத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக வைத்திருந்த கடைகளை அகற்றி கொள்ள பல மாதமாக, கடை உரிமையாளர்களை அதிகாரிகள் அறிவுறுத்தி வந்தனர். போதிய கால அவகாசம் வழங்கியும், காலி செய்யாததால் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளன. இவ்வாறு அமைச்சர் கூறினார்.
எம்.பி., அந்தியூர் செல்வராஜ், மேயர் நாகரத்தினம், துணை மேயர் செல்வராஜ், தி.மு.க., மாவட்ட துணை செயலாளர் செந்தில்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.