sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

கோவில் மலைப்பாதை சீரமைப்பில் தாமதம் ஏன்? இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் தகவல்

/

கோவில் மலைப்பாதை சீரமைப்பில் தாமதம் ஏன்? இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் தகவல்

கோவில் மலைப்பாதை சீரமைப்பில் தாமதம் ஏன்? இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் தகவல்

கோவில் மலைப்பாதை சீரமைப்பில் தாமதம் ஏன்? இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் தகவல்


ADDED : ஜூலை 14, 2025 03:39 AM

Google News

ADDED : ஜூலை 14, 2025 03:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு திண்டல் வேலாயுதசுவாமி கோவிலில் நடக்கும் திருப்-பணி, 186 அடி உயர முருகன் சிலை அமைக்கும் பணிகளை வீட்டு வசதி, மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் முத்து-சாமி, இந்துசமய அறநிலைய துறை அமைச்சர் சேகர்பாபு நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

பிறகு நிருபர்களிடம் அமைச்சர் முத்துசாமி கூறியதாவது:

திண்டல் கோவிலில் ஆசியாவிலேயே மிக உயரமாக, ௧௮௬ அடியில் முருகன் சிலை அமைக்கப்படவுள்ளது. இதற்கான பணி-களில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இதில்லாமல் இரு கல்-யாண மண்டபம் கட்டவும் ஏற்பாடு செய்துள்ளோம். கோவிலில், சிவன் கோவில் கட்டுமான பணி இரண்டு மாதத்தில் முடியும். ராஜகோபுரத்தில் இருந்து கோவிலுக்கு செல்லும் வகையில், படி கட்டும் பணி இரண்டு மாதத்தில் நிறைவு பெறும். முருகன் சிலை அமைக்கும் பணி விரைவாக துவங்கப்படும். சிலைக்கு நன்கொடை வழங்க அதிக உபயதாரர்கள் தயாராக உள்ளனர். சிலை அமைத்த பின், அதிக பக்தர்கள் வருவார்கள் என்பதால், கோவிலில் வழிகளை அதிகப்படுத்த உள்ளோம்.

திண்டல் மலையின் உயரம், 50 அடி. 3.5 அடிக்கு பீடம் இருக்கும். அதன்மேல், 186 அடி முருகன் சிலை அமைக்கப்படு-கிறது. வலுவாக இருக்க வேண்டும் என்பதால் சிமெண்ட் மூலமா-கவே சிலை கட்டவுள்ளோம். பீடம் உட்பட மற்ற அனைத்தும் கற்களால் கட்டப்படும். ஏற்கெனவே மலேசியா, சேலம் அருகே முத்துமலை போன்ற இடங்களில் முருகன் சிலை கட்டியதற்கான விவரங்கள் சேகரித்து, நவீனதொழில் நுட்பங்களை பயன்படுத்த உள்ளோம். இவ்வாறு முத்துசாமி கூறினார்.

அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது:

சென்னிமலை முருகன் கோவிலில் மலைப்பாதை அமைக்கும் பணியை, 30 நாட்களுக்குள் முடிக்காவிட்டால், போராட்டம் நடத்துவோம் என அ.தி.மு.க., அறிவித்துள்ளது. பத்து ஆண்டு-கால ஆட்சியில் இந்த எண்ணம் அவர்களுக்கு வரவில்லை. மலைப்பாதை புலிகள் நடமாட்டத்தின் ஒரு பகுதியாக உள்-ளதால், 20 நாட்களுக்கு முன் அமைச்சர்கள், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினோம். விரைவில் அனுமதி வழங்கி பணி தொடங்கும். நடப்பாண்டு இறுதிக்குள் பணி நிறைவு

பெறும்.

இவ்வாறு கூறினார்.

அமைச்சர்களுடன் ராஜ்யசபா எம்.பி., செல்வராஜ், ஈரோடு எம்.பி., பிரகாஷ், எம்.எல்.ஏ., சந்திரகுமார், மேயர் நாகரத்தினம் உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us