/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
நாமக்கல் நீதிமன்ற வளாகத்தில் 'சமரசம் செய்ய விரும்பு' நிகழ்ச்சி
/
நாமக்கல் நீதிமன்ற வளாகத்தில் 'சமரசம் செய்ய விரும்பு' நிகழ்ச்சி
நாமக்கல் நீதிமன்ற வளாகத்தில் 'சமரசம் செய்ய விரும்பு' நிகழ்ச்சி
நாமக்கல் நீதிமன்ற வளாகத்தில் 'சமரசம் செய்ய விரும்பு' நிகழ்ச்சி
ADDED : ஜூலை 23, 2025 02:15 AM
நாமக்கல், நாமக்கல் நீதிமன்றத்தில், 'சமரசம் செய்ய விரும்பு' என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி, நேற்று நடந்தது.
உச்சநீதி மன்றத்தின் வழிகாட்டுதல்படியும், உயர்நீதிமன்றத்தின் அறிவுறுத்தல்படியும், நாமக்கல் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடந்த, 'சமரசம் செய்ய விரும்பு' என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட முதன்மை நீதிபதி குருமூர்த்தி தலைமை வகித்து, நடமாடும் காணொளி வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். தொடர்ந்து, பொதுமக்கள் மற்றும் நீதிமன்ற அலுவலர்களுக்கு விழிப்புணர்வு துண்டுபிரசுரம் வினியோகித்தார்.
இதில், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிபதிகளும் மற்றும் தமிழ்நாடு சமரசம் மையத்தில் உள்ள இரண்டு சமரச பயிற்சியாளர்களும், 30 சமரசம் பயிற்சி பெறும் வக்கீல்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.