/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஈரோடு மாவட்டத்தில் பரவலாக கனமழை: பாலத்தில் தேங்கிய நீரில் கார், லாரி மூழ்கியது
/
ஈரோடு மாவட்டத்தில் பரவலாக கனமழை: பாலத்தில் தேங்கிய நீரில் கார், லாரி மூழ்கியது
ஈரோடு மாவட்டத்தில் பரவலாக கனமழை: பாலத்தில் தேங்கிய நீரில் கார், லாரி மூழ்கியது
ஈரோடு மாவட்டத்தில் பரவலாக கனமழை: பாலத்தில் தேங்கிய நீரில் கார், லாரி மூழ்கியது
ADDED : மே 21, 2024 11:37 AM
சென்னிமலை: சென்னிமலை பகுதியில் இரண்டு நாட்களாக கொட்டிய கனமழையால், வீடுகளில் வெள்ளம் புகுந்தது. ரயில்வே பாலத்தில் தேங்கிய நீரில் கார், லாரி மூழ்கியது.சென்னிமலை டவுன் மற்றும் சுற்றுபுற பகுதிகளில் இரண்டு நாட்களாக கன மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் பெய்த கன மழையால் வாய்ப்பாடி ரயில்வே ஸ்டேசன் அருகே, விஜயமங்கலம் செல்லும் ரோட்டில் உள்ள ரயில்வே நுழைவு பாலத்தில் குளம் போல் தண்ணீர் தேங்கியது.
இந்நிலையில் வெப்பிலி அரசு தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் நடராஜ், அவரது மனைவி ஆகியோர், சென்னிமலைக்கு மாருதி 800 காரில், இந்த வழியாக வந்தனர். தண்ணீர் அதிகமானதால் காரை விட்டுவிட்டு வெளியே வந்து விட்டனர். சிறிது நேரத்தில் கார் நீரில் முழ்கியது. அதேபோல் டாரஸ் லாரியும் இதில் சிக்கியது. ஜே.சி.பி.., இயந்திரம் உதவியுடன் லாரியை மீட்டனர். மோட்டார் மூலம் நீரை அகற்றிய நிலையில், நேற்று காலை கார் மீட்கப்ட்டது.இந்நிலையில் நேற்று மாலையும் பலத்த மழை பெய்ததால், ரயில்வே பாலத்தில், 15 அடி உயரத்துக்கு தண்ணீர் தேங்கியது. கிராம மக்கள் யாரும் செல்லாமல் காவல் காத்தனர். முகாசிபிடாரியூர் ஊராட்சி தியாகி குமரன் நகர் பகுதியில், 20க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளம் சூழ்ந்தது. அப்பகுதி மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான பகுதியில் தங்க வைக்கப்பட்டனர். இதேபோல் பல பகுதியில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.
பவானி சுற்று வட்டாரத்தில் மழை
பவானி மற்றும் சுற்று வட்டாரத்தில் நேற்று மதியம், 2:௦௦ மணிக்கு மிதமான மழை பெய்தது. தொட்டிபாளையம், செலம்பகவுண்டன்பாளையம், இரட்டைக்கரடு, பருவாச்சி, செம்புளிச்சாம்பாளையம் உள்ளிட்ட இடங்களில், 20 நிமிடத்துக்கும் மேலாக மிதமழை பெய்தது.
புளியம்பட்டியில் சாரல் மழை
புன்செய்புளியம்பட்டியில் நேற்று மதியம் மழை பெய்ய துவங்கியது. காற்றின் இடையூறு இல்லாமல், இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக சாரல் மழையாக பெய்தது.
4வது நாளாக மழை
பெருந்துறை மற்றும் சுற்றுப் பகுதிகளில், கடந்த, 17ம் தேதி முதல் தொடர்ந்து மழை பெய்கிறது. நான்காவது நாளாக நேற்றும் மழை பெய்தது. தொடர் மழையால் விஜயமங்கலம் சந்தை அருகில் உள்ள குளம், மலையங்குட்டை நிரம்பி தண்ணீர் வெளியேறி வருகிறது. இதேபோல் பெருந்துறை பகுதியில் சிறு குளங்கள் நிரம்பி வருகின்றன.

