/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சத்தியமங்கலம் பகுதிகளில் இரவு பரவலாக மழை
/
சத்தியமங்கலம் பகுதிகளில் இரவு பரவலாக மழை
ADDED : செப் 30, 2024 12:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சத்தியமங்கலம் பகுதிகளில்
இரவு பரவலாக மழை
சத்தியமங்கலம், செப். 30-
சத்தியமங்கலம் பகுதிகளில், நேற்று இரவு பரவலாக பலத்த மழை பெய்ததால் வெப்பம் குறைந்தது.
சிக்கரசம்பாளையம், வடவள்ளி, கெஞ்சனுார், கொமராபாளையம், சதுமுகை, ஆலத்துக்கோம்பை, அரியப்பம்பாளையம் ,கே.என்.பாளையம்,உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் நள்ளிரவில் மழை பெய்யத் தொடங்கியது. திடீர் மழையால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் வழிந்தோடியது. இந்நிலையில் நேற்று இரவு, 7:45 மணிக்கு துவங்கிய மழை 8:20 மணி வரை தொடர்ந்தது. இதே போல் கடம்பூர் சுற்றுவட்டார பகுதிகளில், நேற்று இரவு 9:00 மணிக்கு லேசான மழை பெய்தது.