/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
குடிபோதை கணவர் சாவில் மர்மம் மறுவாழ்வு மையம் மீது மனைவி புகார்
/
குடிபோதை கணவர் சாவில் மர்மம் மறுவாழ்வு மையம் மீது மனைவி புகார்
குடிபோதை கணவர் சாவில் மர்மம் மறுவாழ்வு மையம் மீது மனைவி புகார்
குடிபோதை கணவர் சாவில் மர்மம் மறுவாழ்வு மையம் மீது மனைவி புகார்
ADDED : மார் 20, 2024 01:33 AM
ஈரோடு:கோபி,
கிருஷ்ணா நகரை சேர்ந்தவர் சாம்பவி. குடும்பத்தினர், உறவினருடன்
வந்து, ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் வழங்கிய மனுவில்
கூறியதாவது:
எனது கணவர் பூபாலன், குடிப்பழக்கத்துக்கு
அடிமையானார். கடந்த ஜன., 15ல் பெருந்துறையில் உள்ள, போதை மறுவாழ்வு
மையத்தில் சேர்த்தோம். கடந்த, 15ம் தேதி இரவு இறந்துவிட்டார்.
எங்களுக்கு தெரிவிக்காமல், தனியார் மருத்துவமனையில் அவரை
சேர்த்தனர். மருத்துவமனையில் நாங்கள் விசாரித்தபோது,
மருத்துவமனைக்கு அழைத்து வந்தபோது,அவருக்கு இதய துடிப்பு இல்லை.
அவரை காப்பாற்ற முடியவில்லை என்றனர்.
கணவர் சாவில் சந்தேகம்
உள்ளதால், புகாரின் அடிப்படையில் பெருந்துறை போலீசார், சந்தேக மரணம்
என வழக்குப்பதிவு செய்தனர். கணவர் இறப்பதற்கு, இரு நாளுக்கு முன்,
மூச்சுவிட முடியவில்லை என கூறினார். மறுவாழ்வு மையத்தினர்
அலட்சியப்படுத்தியதால் இறந்துள்ளார். இதுபற்றி விசாரித்து
நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார்.