ADDED : மே 02, 2025 01:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெருந்துறை:பெருந்துறை அடுத்த, விஜய
மங்கலம் அம்மன் கோவில் அருகில் குடியிருப்பவர் கணேஷ்ராஜ். இவர், அங்குள்ள தனியார் ஸ்பின்னிங் மில்லில் மெக்கானிக்காக வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி ஜானகி, 30. இவர்களது மகன் சிவசந்திரனுக்கு சிறிது மன வளர்ச்சி குன்றிய நிலையில் உள்ளார்.
கடந்த, 28ம் தேதி இரவு 12:00 மணிக்கு வேலை முடிந்து, கணேஷ்ராஜ் வீட்டிற்கு வந்து கதவை தட்டியுள்ளார். கதவு திறக்க மனைவி ஜானகி காலதாமதம் செய்ததால், ஆத்திரத்தில் அடித்துள்ளார். இதில், ஜானகி கீழே விழுந்து, தலையில் அடிபட்டு உயிரிழந்தார். இதுகுறித்து, பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து, கணேஷ்ராஜை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நீதிபதி உத்தரவின்படி, கோபியிலுள்ள மாவட்ட சிறையில் அடைத்தனர்.