/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பாலத்தில் கார் மோதியதில் மனைவி சாவு; கணவன் காயம்
/
பாலத்தில் கார் மோதியதில் மனைவி சாவு; கணவன் காயம்
ADDED : மே 03, 2024 06:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அந்தியூர் : கோபி அருகே பங்களாப்புதுாரை சேர்ந்தவர் அன்வர் பாட்ஷா, 58; இவரின் மனைவி ஜின்னத், 55; இருவரும் நேற்று முன்தினம் மருத்துவமனைக்கு ஆம்னி காரில் சென்றனர். சத்தி - பவானி சாலையில் சென்றபோது அத்தாணி ஓடைமேடு பாலத்தில், தடுப்பின் மீது கார் மோதியது.
இதில் பலத்த காயமடைந்த இருவரையும் அப்பகுதி மக்கள் மீட்டு, கோபி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். ஆனால் ஜின்னத் செல்லும் வழியிலேயே இறந்து விட்டார். மேல் சிகிச்சைக்காக கோபியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அன்வர் பாட்ஷா சேர்க்கப்பட்டார். இதுகுறித்து ஆப்பக்கூடல் போலீசார் விசாரிக்கின்றனர்.