ADDED : ஜூன் 22, 2025 01:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பவானி, சித்தோடு, கோணவாய்க்கால், ஈ.பி.காலனியை சேர்ந்தவர் வேல்ராஜா, 41; கால் டாக்சி டிரைவர். இவரின் மனைவி புவனேஸ்வரி, 31; தம்பதிக்கு இரு மகள்கள் உள்ளனர்.
நேற்று முன்தினம் இரவு, மகள்களை டியூசன் சென்டரில் இருந்து அழைத்து வர சென்ற புவனேஸ்வரி வீடு திரும்பவில்லை. இதுகுறித்து வேல்ராஜா புகாரின்படி, சித்தோடு போலீசார் தேடி வருகின்றனர்.