/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
குழந்தையுடன் மனைவி மாயம்:கணவர் புகார்
/
குழந்தையுடன் மனைவி மாயம்:கணவர் புகார்
ADDED : ஆக 28, 2025 01:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு, சிவகிரி, கருக்கம்பாளையம் வள்ளிபுரத்தை சேர்ந்தவர் பூபதி, 27. இவரது மனைவி காயத்ரி, 23. இவர்களுக்கு மூன்று வயதில் மகள் உள்ளார். காயத்ரிக்கு மார்பில் கட்டி இருந்ததால், அறுவை சிகிச்சை செய்து வீட்டில் குழந்தையுடன் இருந்து வந்தார்.
கடந்த 18ம் தேதி வீட்டில் இருந்து குழந்தையுடன் வெளியேறிய காயத்ரி மீண்டும் வீடு திரும்பவில்லை. அக்கம்பக்கம், உறவினர்கள் வீடுகளில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. சிவகிரி போலீசில் பூபதி அளித்த புகார்படி, போலீசார் தேடி வருகின்றனர்.

