/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
குழந்தையுடன் மனைவி மாயம்; கணவன் புகார்
/
குழந்தையுடன் மனைவி மாயம்; கணவன் புகார்
ADDED : ஏப் 25, 2025 01:09 AM
நம்பியூர்:
நம்பியூர் அருகேயுள்ள கோட்டுப்புள்ளாம்பாளையம் புதுாரை சேர்ந்தவர் ஆனந்தகுமார், 36; கட்டடம் இடிக்கும் (பிரேக்கர்) வேலை செய்கிறார். இவரது மனைவி ரஞ்சனி, 26; தம்பதிகளுக்கு, ௧௧ வயதில் மகன், ௮ வயதில் மகள் உள்ளனர்.
கணவரின் ஐ.டி.,யை பயன்படுத்தி தனியார் பைனான்ஸில், 2.௫௦ லட்சம் ரூபாய் கடன் பெற்று, அவரது சித்திக்கு கொடுத்துள்ளார். இது தெரிந்ததால் இருவருக்கும் இரு நாட்களுக்கு முன் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் காலை ஆனந்தகுமார் வழக்கம்போல் வேலைக்கு சென்று விட்டார். சிறிது நேரத்தில் கணவரை, ரஞ்சனி மொபைல்போனில் தொடர்பு கொண்டுள்ளார். மகளுடன் வெளியில் செல்வதாகவும், தன்னை தேட வேண்டாம் என்று கூறிவிட்டு, மொபைல் போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டார்.
ஆனந்தகுமார் புகாரின்படி நம்பியூர் போலீசார் வழக்குப்பதிந்து, தாய் மற்றும் மகளை தேடி வருகின்றனர்.
பெண்ணை தாக்கி நகை