ADDED : ஆக 29, 2026 06:55 AM
அ நிறம் | அளவு
சென்னிமலை:சென்னிமலை
யூனியன், முருகத்தொழுவு அருகே அஞ்சுராம்பாளையத்தை சேர்ந்த
வெல்டிங் பட்டறை தொழிலாளி லட்சுமணன். இவரது மனைவி பிரியா,28.
இவர்களுக்கு விஷ்ணு, 7, மெய்ராகவன், 4, என இரு மகன்கள் உள்ளனர்.
கடந்த,
25ம் தேதி இரு குழந்தைகளுடன் வீட்டை விட்டு வெளியே சென்ற பிரியா, இரவு
நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. அவரது போனும் சுவிட்ச் ஆப்
செய்யப்பட்டிருந்தது. இதனால், அதிர்ச்சியடைந்த லட்சுமணன்,
உறவினர் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை. இதையடுத்து, லட்சுமணன்
அளித்த புகாரின் பேரில், வெள்ளோடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
