ADDED : ஆக 29, 2026 06:54 AM
ஈரோடு:சிறப்பு
சிகிச்சை நிபுணர், ஆர்.எம்.என்.சி.எச்., ஆலோசகர், யோகா, இயற்கை
மருத்துவர், ஆயுர்வேத மருத்துவர், யோகா மற்றும் இயற்கை மருத்துவ
ஆலோசகர், அட்டெண்டர், சித்த மருத்துவர், யோகா வல்லுனர், சித்தா
மருந்தாளுனர், சித்தா மருத்துவ உதவியாளர், தரவு உதவியாளர், ஆய்வக
தொழில் நுட்ப வல்லுனர் என, 19 பணியிடங்கள், மாவட்ட சுகாதார
நலச்சங்கம் மூலம் ஒப்பந்த அடிப்படையில், தற்காலிக பணியிடங்கள்
நிரப்பப்படுகிறது
இதற்காக கடந்த, 21 வரை விண்ணப்பம் பெறப்பட்டது.
கூடுதல் நபர்கள் விண்ணப்பிக்க ஏதுவாக வரும், 31 வரை அவகாசம்
நீட்டிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்கள் விண்ணப்ப படிவத்தை,
https://erode.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, உரிய
சான்றிதழ்களுடன் சுய சான்றொப்பம் செய்து விண்ணப்பிக்கலாம்.
வரும்,
31க்குள் நிர்வாக செயலர் மற்றும் மாவட்ட நலவாழ்வு சங்கம், மாவட்ட
சுகாதார அலுவலகம், திண்டல், ஈரோடு என்ற முகவரியிலும், 0424 2431020
என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.
