/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
டிரைவர் சாவில் சந்தேகம் போலீசில் மனைவி புகார்
/
டிரைவர் சாவில் சந்தேகம் போலீசில் மனைவி புகார்
ADDED : மே 11, 2025 01:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு, மதுரை, அனுப்பானடி, சக்தி விநாயகர் வீதியை சேர்ந்த லாரி டிரைவர் கண்ணன், 47; ஈரோட்டில் பார்க் சாலையில் ஒரு லாரி டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். கடந்த, 7ல் லாரியை நிறுத்தி விட்டு, அலுவலகத்தில் ஓய்வெடுத்தார்.
மறுநாள் இறந்தார். டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தினர் கண்ணன் உடலை, ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கண்ணன் மனைவி வளர்மதி, ஈரோட்டுக்கு வந்து பார்த்தபோது, அவரது உடலில் மூக்கு, வாய், உதடு பகுதியில் காயம் இருந்தது. இதனால் கணவர் சாவில் மர்மம் இருப்பதாக, வீரப்பன்சத்திரம் போலீசில் புகாரளித்துள்ளார். இதன் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.