/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கடன் தொல்லையால் கணவன் மாயம் போலீசில் மனைவி புகார்
/
கடன் தொல்லையால் கணவன் மாயம் போலீசில் மனைவி புகார்
ADDED : ஜூலை 03, 2025 01:21 AM
ஈரோடு, ஈரோடு, கருங்கல்பாளையம் கமலா நகர் 2வது வீதியை சேர்ந்தவர் அழகேசன், 64. பல்வேறு ஊர்களுக்கு சென்று, சுவாமி படங்களை விற்பனை செய்து வருகிறார். இவர் மனைவி மகாலட்சுமி, 59. பி.பெ.அக்ரஹாரம் ஆரம்ப சுகாதார நிலைய துாய்மை பணியாளர். இவர்கள் மகள் சாந்திக்கு திருமணமாகி சத்தியமங்கலத்தில் வசிக்கிறார்.
கடந்த 1ம் தேதி மதியம் சாந்திக்கு போன் செய்து பேசிய அழகேசன், தான் வாங்கிய கடன்களை செலுத்தி விட வேண்டும், இனி உயிருடன் இருக்க மாட்டேன் என எழுதி, அதை வாட்ஸ் ஆப் மூலம் தன் மகளுக்கு தகவல் அனுப்பியுள்ளார். பின்னர் மொபைல் போனை சுவிட்ச் ஆப் செய்துள்ளார். பல இடங்களில் அழகேசனை மனைவி, மகள் ஆகியோர் தேடினர். ஆனால் தகவல் இல்லை.
கணவனை கண்டுபிடித்து தரக்கோரி, கருங்கல்பாளையம் போலீசில் மகாலட்சுமி புகார் செய்துள்ளார்.