ADDED : செப் 25, 2024 01:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மனைவி மாயம்: கணவன் புகார்
ஈரோடு, செப். 25-
மொடக்குறிச்சி, 60 வேலாம்பாளையம், ஆலாங்காட்டுவலசை சேர்ந்த கார்த்தி மனைவி அந்தோணியம்மாள், 33; தம்பதிக்கு இரு மகள்கள் உள்ளனர். அந்தோணியம்மாள் இரண்டு ஆண்டுகளாக மன நிலை பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தார். அடிக்கடி தன் சொந்த ஊரான ராமநாதபுரம் செல்ல வேண்டும் என்று கூறி வந்தார். இந்நிலையில் அவர் மாயமாகி விட்டார். கார்த்தி புகாரின்படி அறச்சலுார் போலீசார், தேடி வருகின்றனர்.