/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
காளிங்கராயன் கால்வாயில் ஆ.தாமரை அகற்றப்படுமா?
/
காளிங்கராயன் கால்வாயில் ஆ.தாமரை அகற்றப்படுமா?
ADDED : மே 25, 2024 02:49 AM
ஈரோடு: பவானி ஆற்றில் இருந்து காளிங்கராயன் வாய்க்கால் மூலம், 15 ஆயிரம் ஏக்கர் பாசனத்துக்காக தண்ணீர் திறந்து விடப்படுகிறது. ஆண்டுக்கு, 10 மாதங்கள் தண்ணீர் செல்வதால் வாய்க்காலில் குளிரி, ஆகாயத்தாமரை, ஊனாங்கொடி உள்ளிட்ட செடி, கொடி வகைகள் அதிகம் படர்ந்து காணப்படுகின்றன. சில இடங்களில் குப்பை, பிளாஸ்டிக் கழிவு கொட்டுவதாலும், சேறு, சகதியாலும் கால்வாயில் நீரோட்டம் பாதிக்கிறது.
தற்போது பவானிசாகர் அணையில் நீர்மட்டம் உயர்ந்துள்ள நிலையில், நீர் திறப்பை அதிகரிக்க வாய்ப்புள்ளது. ஆனால், காளிங்கராயன் வாய்க்காலில் ஆகாயத்தாமரை ஆக்கிரமிப்பால், கடைமடை விவசாயிகளுக்கு தண்ணீர் கிடைக்குமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. எனவே, ஆகாயத்தாமரை அகற்ற பொதுப்பணி துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். கால்வாயில் குவிந்த பிளாஸ்டிக் குப்பையை அள்ளவும் கோரிக்கை எழுந்துள்ளது.

