/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
அரசு பள்ளி எதிரே வேகத்தடை அமைக்கப்படுமா
/
அரசு பள்ளி எதிரே வேகத்தடை அமைக்கப்படுமா
ADDED : ஏப் 25, 2025 12:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மல்லசமுத்திரம்:
கோட்டப்பாளையம் அரசுப்பள்ளி எதிரே, வேகமாக வரும் வாகனங்களால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதால், வேகத்தடை அமைக்க வேண்டும்.
மல்லசமுத்திரம் யூனியன், கோட்டப்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி எதிரே, வையப்பமலை -மல்லசமுத்திரம் சாலை செல்கிறது. பல்வேறு கிராமங்களை
இணைக்கும் இணைப்பு சாலை என்பதால், எப்போதும் கனரக, இலகுரக வாகனங்கள் சென்று வருகின்றன. வாகனங்கள் அதி வேகத்தில் செல்வதால், மாணவர்கள்,
ஆசிரியர்கள், பொதுமக்கள் சாலையை கடக்க சிரமப்படுகின்றனர். சில சமயங்களில் விபத்துகளும் நடந்து விடுகின்றன. எனவே, வாகனங்களின் வேகத்தை
கட்டுப்படுத்தும் விதமாக,
அரசுப்பள்ளி எதிரே வேகத்தடை அமைக்க வேண்டும்.

