/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பச்சைமலைக்கு மலைப்பாதை வழியாக கார்கள் செல்ல தடை விதிக்கப்படுமா
/
பச்சைமலைக்கு மலைப்பாதை வழியாக கார்கள் செல்ல தடை விதிக்கப்படுமா
பச்சைமலைக்கு மலைப்பாதை வழியாக கார்கள் செல்ல தடை விதிக்கப்படுமா
பச்சைமலைக்கு மலைப்பாதை வழியாக கார்கள் செல்ல தடை விதிக்கப்படுமா
ADDED : பிப் 06, 2025 05:35 AM
கோபி: கோபி, பச்மைலை முருகன் கோவிலுக்கு வரும் கார்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
கோபி அருகே பச்சைமலை முருகன் கோவிலுக்கு, மலைப்பாதை வழியாகவும், 180 படிக்கட்டுகள் வழியாகவும் பக்தர்கள் பயணிக்கின்றனர். நாளுக்கு நாள் பச்சைமலைக்கு செல்லும் பக்தர்களின் அதிகரிப்பால், கோவில் வளாகத்தில், டூவீலர் மற்றும் கார் போன்ற வாகனங்கள் வருகை அதிகரித்துள்ளது. மலைப்பாதை வழியாக கோவிலுக்கு, அதிகளவில் கார்களில் பக்தர்கள் வருகின்றனர். இதனால் அங்கு தாறுமாறாக அடிக்கடி நிறுத்தப்படும் கார்களால், மலையிலும், அதன் பாதையிலும், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
குறிப்பாக விசேஷ நாட்களில், கார்கள் ஆக்கிரமிப்பால் டூவீலர் போன்ற வாகனங்கள் மலைக்கோவிலை அடைவதில் சிரமம் ஏற்படுகிறது. எனவே அறநிலையத்துறை நிர்வாகம், மலைப்பாதை வழியாக கார்கள் பயணிப்பதை தடை செய்ய வேண்டும் என, பக்தர்கள் தரப்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்.