/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சிப்காட்டில் பயன்பாடில்லாத 200 தொழிற்கூடங்கள் மாவட்ட நிர்வாகம் கவனத்தில் கொள்ளுமா?

ADDED : அக் 12, 2024 07:20 AM
பெருந்துறை : பெருந்துறை அருகே சிப்காட் தொழிற்கூடம் உள்ளது. கடந்த, 2000ல் தொடங்கப்பட்ட சிப்காட்டில் ஐவுளி பதனிடும் ஆலை, ரெடிமேடு ஆடை
தயாரிப்பு நிறுவனங்கள், நூல் மில்கள், ஐவுளி மில்கள், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ரானிக்ஸ் உதிரி பாகங்கள் தயாரிப்பு நிறுவனங்கள் என,
200க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் செயல்படுகின்றன. சிப்காட் நிறுவனம் தொங்கும்போது, ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் தொழில் தொடங்க ஏதுவாக, 150 ஏக்கர் நிலம் தாட்கோவுக்கு
ஒதுக்கப்பட்டது. இங்கு பல கோடி ரூபாய் மதிப்பில், 200க்கு மேற்பட்ட சிறுகுறு தொழிற் கூடங்கள், அவற்றுக்கு நீர் வழங்க மேல்நிலை
நீர்த்தேக்க தொட்டிகள் அமைக்கப்பட்டன. ஆனால், இவை, 25 ஆண்டுளாகியும் பூட்டிக் கிடக்கிறது. இதனால் இந்தப்பகுதி, சமூக
விரோதிகளின் கூடாரமாக மாறியுள்ளது.இதுகுறித்து சிப்காட் அதிகாரி ஒருவர் கூறுகையில், 'நிலங்கள் கையகப்படுத்தி, தொழில் நிறுவனங்களுக்கு விற்பனை செய்வது மட்டுமே,
சிப்காட் நிறுவனத்தின் பணி. அவ்வாறு விற்பனை செய்யும் நிலங்களை நீண்ட நாட்களாக பயன்படுத்தாமல் இருந்தால், சிப்காட்
நிறுவனமே திரும்ப பெற்றுக் கொள்ளும். அந்த வகையில் தாட்கோவுக்கு வழங்கிய, 150 ஏக்கர் நிலத்தில், 48 ஏக்கர் நிலத்தை திரும்ப பெற்று,
மூன்று நிறுவனங்களுக்கு, தொழிற்சாலை தொடங்க வழங்கப்பட்டுள்ளது. மீதி நிலங்களை மீட்பது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு
நடந்து வருகிறது' என்றார்.