/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
எச்சரிக்கை அறிவிப்பின்றி சத்தி சாலையில் பணி மின் வாரியம் நடவடிக்கை எடுக்குமா?

ADDED : ஜூலை 09, 2025 01:22 AM
ஈரோடு,  ஈரோடு மாநகரின் பிரதான சாலைகளில் ஒன்றாக சத்தி ரோடு உள்ளது. அதிக எண்ணிக்கையில் வணிக கடைகள் உள்ளதாலும், அருகிலேயே பஸ் ஸ்டாண்ட் உள்ளதாலும், எந்நேரமும் போக்குவரத்து காணப்படும்.
இந்நிலையில் பஸ் ஸ்டாண்ட் அருகில் மாநகராட்சி திருமண மண்டப சாலை கார்னரில், புதைவட மின் கேபிள்களை டிரான்ஸ்பார்மரில் இணைக்கும் பணி, மின்வாரியம் சார்பில் நடந்து வருகிறது. இதற்காக சாலையை ஒட்டி குழி தோண்டியுள்ளனர். ராட்சத மின் ஒயர்களும் அனகோண்டா பாம்பு போல் சுருண்டு கிடக்கிறது. ஆனால் இதுகுறித்து எச்சரிக்கை அறிவிப்பு எதுவுமில்லை. சாலைக்கு அருகாமையில் கிடப்பதால், இரவில் டூவீலர்களில் செல்வோர் விபத்தில் சிக்கும் அபாயம் அதிகமாக உள்ளது. பேரிகார்டு வைப்பதுடன் அதில் இரவில் ஒளிரும் டேப்பை கட்ட வேண்டும். விபத்து நடந்து யாராவது பாதிக்கப்படும் முன், மின்வாரியம் நடவடிக்கை எடுக்குமா?