/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
45வது வார்டில் மாநகராட்சி பூங்காவுக்கு பூட்டு மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்படுமா?

ADDED : ஜூலை 28, 2025 04:49 AM
ஈரோடு: ஈரோடு மாநகராட்சி, 45வது வார்டு பகுதி மக்கள் பயன்பெறும் வகையில், சூரம்பட்டி நால்ரோடு அருகில் ராஜாக்காடு வீதியில் பெரியநகர் பூங்கா உள்ளது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கட்டப்பட்டு மாநகராட்சி கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது.
இங்கு சிறுவர் முதல் பெரியவர்கள் வரை நடைப்பயிற்சி செல்ல வசதி, சிறுவர்கள் விளையாட உபகரணங்கள், கழிவறை வசதி என அனைத்தும் உள்ளது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக திறக்கப்படாமல் பூட்டி கிடக்கிறது. இதனால், பூங்கா குப்பை கூடமாக காட்சியளிக்கிறது. நுழைவுவாயில் கேட் அருகில், மலை போல் இலை, குப்பை தேக்கி வைக்கப்பட்டுள்ளது. மக்கள் பயன்பாட்டுக்கு கட்டிய பூங்காவை, பூட்டி வைத்திருப்பது எந்த வகையில் நியாயம்? என்கின்றனர் அப்பகுதி மக்கள்.
இதுகுறித்து விசாரித்தபோது, பூங்காவை பராமரிக்க, கவனித்து கொள்ள அசோசியேசன் வசம் பொறுப்பை ஒப்படைக்க முடிவு செய்துள்ளனர். இதற்காக சில அமைப்புகளிடம் பேச்சுவார்த்தை நடக்கிறது. இதில் ஏதாவது ஒரு அமைப்பு மாட்டும். அவர்கள் தலையில் கட்டலாம் எனவும், மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.