/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ரூ.15 கோடியில் குடிநீர் மறு சீரமைப்பு திட்டம் சென்னிமலை மக்களின் தாகம் தீர்க்குமா?
/
ரூ.15 கோடியில் குடிநீர் மறு சீரமைப்பு திட்டம் சென்னிமலை மக்களின் தாகம் தீர்க்குமா?
ரூ.15 கோடியில் குடிநீர் மறு சீரமைப்பு திட்டம் சென்னிமலை மக்களின் தாகம் தீர்க்குமா?
ரூ.15 கோடியில் குடிநீர் மறு சீரமைப்பு திட்டம் சென்னிமலை மக்களின் தாகம் தீர்க்குமா?
ADDED : நவ 15, 2025 03:11 AM
சென்னிமலை: சென்னிமலை டவுன் பஞ்., பகுதி மக்களின் குடிநீர் தேவை, 25 ஆண்டுகளாகவே பற்றாக்குறையாக உள்ளது. அதாவது, 15 நாட்களுக்கு ஒரு முறை வரும் தண்ணீரை சேகரித்து பாதுகாத்து பயன்படுத்தும் நிலைதான் உள்ளது.
முறையான குடிநீர் கேட்டு அ.தி.மு.க., ஆட்சியில் இருந்தால் தி.மு.க.,வினரும், தி.மு.க., ஆட்சியில் இருந்தால் அ.தி.மு.க.,வினரும் மாறி, மாறி போராட்டம் நடத்துவது வாடிக்-கையானது. ஆனாலும் பிரச்னைக்கு தீர்வு கிடைத்தபாடில்லை.இந்நிலையில் கடந்த ஆண்டு, டவுன் பஞ்சாயத்து தி.மு.க., கவுன்சிலர்களே குடிநீர் பிரச்னையை வலியுறுத்தி, டவுன் பஞ்., அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தை நடத்தினர். அப்போ-துதான் பிரச்னையின் முக்கியத்துவத்தை, தொகுதி எம்.எல்.ஏ.,வும் அமைச்சருமான சாமிநாதன் உணர்ந்தார்.
இதை தொடர்ந்து டவுன் பஞ்., தலைவர் ஸ்ரீதேவி அசோக், முழு முயற்சி எடுத்து அமைச்சர் நேருவிடம் போராடியதின் பலனாக, சென்னிமலை நகருக்கு, 15 கோடி ரூபாய் மதிப்பிலான குடிநீர் மறு சீரமைப்பு பணியை, அமைச்சர் சாமிநாதன் நேற்று முன்-தினம் தெடங்கி வைத்தார்.
இந்த பணி முடிந்து, தங்களின் குடிநீர் பிரச்னை தீர்வுக்கு வரும் என்பது, சென்னிமலை மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
இதுகுறித்து டவுன் பஞ்., அதிகாரிகள் கூறியதாவது: ------சென்னி-மலை, பெருந்துறை, கருமாண்டிசெல்லிபாளையம், பேரூராட்சிக-ளுக்கான கூட்டுக் குடிநீர் திட்டம், 1975ல் நிறைவேற்றப்பட்டது. இத்திட்டம், 2010ல் அபிவிருத்தி செய்யப்பட்டது. இதன்படி சென்னிமலை, கே.சி.பாளையம், பெருந்துறை, சித்தோடு மற்றும் நசியனுார் பேரூராட்சிகளுக்கு நாளொன்றுக்கு நபருக்கு, 70 லிட்டர் வீதம் குடிநீர் வழங்க வடிவமைக்கப்பட்டது. இதில் சென்னிமலைக்கும் மட்டும் பற்றாக்குறை ஏற்படுகிறது.
அதாவது சென்னிமலைக்கான நீருந்து நிலையம் காவிரி ஆற்றில் கோணவாய்க்கால் அருகில் அமைந்துள்ளது. 40 ஆண்டுகளுக்கு மேலாக பயன்பாட்டில் உள்ளதால், ஆற்றில் அதிகப்படியான நீர்-வரத்தாகும்போது நீர் எடுக்க இயலாத நிலை ஏற்படுகிறது.
இதற்கு புதிய நீர் சேகரிப்பு கிணறு அமைக்கவும், கருமாண்டி-செல்லிபாளையம் நீருந்து நிலையத்திலிருந்து சென்னிமலைக்கு செல்லும் சிமெண்ட் குழாய் பதிக்கப்பட்டு, 20 வருடங்களுக்கு மேல் பயன்பாட்டில் உள்ளதால் அடிக்கடி உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வினியோகம் பாதிக்கப்படுகிறது.
இதை சீரமைத்து சிமெண்ட் குழாய்களை, 300 மி.மீ., விட்ட-முள்ள புதிய வார்ப்பு இரும்பு குழாய்களாக மாற்றவும், 30 எச்.பி., மின் மோட்டாரை, 50 எச்.பி., திறன் மின் மோட்டா-ராக மாற்றவும், 15 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மறு சீரமைப்பு திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
இந்த பணி நிறைவடையும் போது சென்னிமலை டவுன் பஞ்., மக்களுக்கு நாளொன்றுக்கு, 2.70 மில்லியன் லிட்டர் குடிநீர் கிடைக்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

