/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பேச்சுப்போட்டியில் வெற்றி; பெற்றவர்களுக்கு பரிசளிப்பு
/
பேச்சுப்போட்டியில் வெற்றி; பெற்றவர்களுக்கு பரிசளிப்பு
பேச்சுப்போட்டியில் வெற்றி; பெற்றவர்களுக்கு பரிசளிப்பு
பேச்சுப்போட்டியில் வெற்றி; பெற்றவர்களுக்கு பரிசளிப்பு
ADDED : அக் 16, 2024 07:08 AM
ஈரோடு: தமிழ் வளர்ச்சி துறை சார்பில் பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியருக்கு காந்தியடிகள் பிறந்த நாளை முன்னிட்டு, ஈரோடு, பன்னீர்செல்வம் பூங்கா அருகே உள்ள அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பேச்சுப்போட்டி நடந்தது. தமிழ் வளர்ச்சி துறை துணை இயக்கனர் இளங்கோ தலைமை வகித்தார்.
பள்ளி அளவிலான போட்டியில் கோபி, வலையபாளையம் அரசு உயர்நிலை பள்ளி நர்மதா, அந்தியூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி நிவேதாஸ்ரீ, உத்தண்டியூர் அரசு உயர்நிலை பள்ளி கோகுல்பிரசாத் ஆகியோர் முதல், 3 இடங்களுக்கான பரிசாக முறையே, 5,000 ரூபாய், 3,000 ரூபாய், 2,000 ரூபாய் பெற்றனர். சிறப்பு பரிசாக ஈரோடு அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி கோபிகா, ஓடத்துறை சோமசுந்தரம் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி கவிபிரியா தலா, 2,000 ரூபாய் வென்றனர்.கல்லுாரி அளவிலான போட்டியில் ஈரோடு சி.என்.கல்லுாரி சுதா, டாக்டர் ஆர்.ஏ.என்.எம்.கலை மற்றும் அறிவியல் கல்லுாரி தமிழரசன், நந்தா இயன்முறை மருத்துவ கல்லுாரி ஷேன் எபி டேனியல் முறையே முதல் மூன்று இடங்களை பிடித்து, ரொக்கப்பரிசு பெற்றனர்.