/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பாசன நீர், மழையின்றி வாடும் மரவள்ளி பயிர்
/
பாசன நீர், மழையின்றி வாடும் மரவள்ளி பயிர்
ADDED : ஏப் 27, 2024 07:05 AM
ஈரோடு : பாசன நீர், கோடை மழையின்றி, ஈரோடு மாவட்டத்தில் மரவள்ளி கிழங்கு பயிர் வாடி, கருகும் சூழலில் உள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.ஈரோடு மாவட்டத்தில் சிவகிரி, மொடக்குறிச்சி, கொடுமுடி, அந்தியூர், பவானி பகுதியிலும், மலைப்பகுதியில் சில இடங்களிலும் மரவள்ளி கிழங்கு, 7,000 ஏக்கருக்கு மேல் சாகுபடி செய்யப்படுகிறது.
டிச., முதல் ஜன., வரை சாகுபடி செய்து, ஆக., - செப்., மாதம் அறுவடை சீசன் துவங்கும். நடப்பாண்டு சாகுபடி செய்யப்பட்ட மரவள்ளி பயிர் கருகி வருவதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.இதுபற்றி தமிழ்நாடு சிறு மற்றும் குறு விவசாயிகள் சங்க மாநில தலைவர் சுதந்திரராசு கூறியதாவது:நடப்பாண்டு பாசன நீர் நிறுத்தப்பட்டதாலும், கோடை மழை இல்லாததாலும் பயிர்கள் வாடியும், கருகும் நிலைக்கும் வந்துள்ளன. கோடை மழை கை கொடுக்காவிட்டால், நீரேற்று பாசனம் தவிர பிற பகுதியில் உள்ள, 50 சதவீத பயிர் சேதமடையும். கடும் வெயிலால் மரவள்ளி கிழங்கில் மாவுச்சத்து குறைந்துள்ளது. ஸ்டார்ச் தன்மை, 28 சதவீதம் இருந்தால்தான் ஜவ்வரிசி உற்பத்திக்கு ஏதுவாக இருக்கும். கோடை மழை கை கொடுக்கும் என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர். இல்லையேல் ஆக., - செப்., மாதம் மரவள்ளி சாகுபடி கடுமையாக பாதிக்கும். இவ்வாறு கூறினார்.

