/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
அரச்சலுார் நகைக்கடை உரிமையாளரை மிரட்டி பணம் பறித்த பெண் கைது
/
அரச்சலுார் நகைக்கடை உரிமையாளரை மிரட்டி பணம் பறித்த பெண் கைது
அரச்சலுார் நகைக்கடை உரிமையாளரை மிரட்டி பணம் பறித்த பெண் கைது
அரச்சலுார் நகைக்கடை உரிமையாளரை மிரட்டி பணம் பறித்த பெண் கைது
ADDED : ஜூன் 06, 2025 01:05 AM
பெருமாநல்லுார், ஈரோடு மாவட்டம் அரச்சலுாரை சேர்ந்தவர் கிருத்திகா, 19; கல்லுாரி மாணவி. பவானி, குமாரபாளையத்தை சேர்ந்த நகைக்கடை உரிமையாளர் ஜெகதீசன், 27; இவரிடம் போனில் பேசி கடந்த ஒரு மாதமாக பழகி வந்துள்ளார்.
ஜெகதீசை தொடர்பு கொண்ட கிருத்திகா, 'உங்களை சந்திக்க வேண்டும்' என கூறி பெருமாநல்லுார் அருகேயுள்ள தட்டாங்குட்டை சொட்டமேடு பகுதிக்கு வரச்சொல்லி உள்ளார். ஜெகதீசன், சொட்டமேடு வந்ததும், கிருத்திகா ஒரு வீட்டுக்கு அழைத்துசென்றுள்ளார். திடீரென வீட்டுக்குள் புகுந்த பெண்ணின் நண்பர்கள் பழனிச்சாமி, அருண் ஆகியோர் போட்டோ, வீடியோ எடுத்துள்ளனர். அதைக்காட்டி ஜெகதீசனை பணம் கேட்டு மிரட்டி உள்ளனர். இரண்டு பவுன் தங்க செயின், 1.5 லட்சம் ரூபாயை கொடுத்துள்ளார்.
பணம், நகையை பறித்து கொண்டு மூவரும் தலைமறைவாயினர். ஜெகதீசன் பெருமாநல்லுார் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிந்து கிருத்திகா, 19, தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் ஊட்டமலை நாடார் காட்டை சேர்ந்த அருண், 33, ஈரோடு மாவட்டம் அந்தியூர் ஜி.எஸ்., காலனி பழனிச்சாமி, 51, ஆகிய மூன்று பேரை கைது
செய்தனர்.