/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
குடிநீர் தொட்டி சிமென்ட் திட்டில் மனிதக்கழிவு பூசிய பெண் கைது
/
குடிநீர் தொட்டி சிமென்ட் திட்டில் மனிதக்கழிவு பூசிய பெண் கைது
குடிநீர் தொட்டி சிமென்ட் திட்டில் மனிதக்கழிவு பூசிய பெண் கைது
குடிநீர் தொட்டி சிமென்ட் திட்டில் மனிதக்கழிவு பூசிய பெண் கைது
ADDED : மே 01, 2025 02:05 AM
கலசப்பாக்கம்::கலசப்பாக்கம் அருகே, குடிநீர் தொட்டியின் சிமென்ட் திட்டின் மீது, மனிதக்கழிவை பூசிய பெண்ணை, போலீசார் கைது செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் அடுத்த பாணாம்பட்டு கிராமத்தில், 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இங்கு பொதுமக்கள் பயன்படுத்தும் குடிநீர் தொட்டி உள்ளது. இதன் அருகே அஞ்சலா, 50, என்பவர் வசிக்கிறார். இப்பகுதி மக்கள் தொட்டியில் தண்ணீர் பிடித்து, துணிகளை துவைப்பதால், அஞ்சலா வீட்டின் முன் கழிவுநீர் தேங்குகிறது. இதனால் ஆத்திரமடைந்த அவர், நேற்று முன்தினம் நள்ளிரவு குடிநீர் தொட்டியை சுற்றி கட்டப்பட்டுள்ள சிமென்ட் திட்டின் மீது, மனித கழிவுகளை பூசினார்.
நேற்று காலையில் கிராம மக்கள் தண்ணீர் பிடிக்க வந்தபோது, இதை கண்டு அதிர்ச்சியடைந்து, குடிநீர் பயன்படுத்துவதை தவிர்த்து, கலசப்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடம் சென்று விசாரணை நடத்தியதில், அஞ்சலா மனித கழிவை குடிநீர் தொட்டி சிமென்ட் திட்டின் மீது
பூசியது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து, விசாரித்து வருகின்றனர்.