/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கடையில் பெண்ணை தாக்கிஐந்தரை பவுன் நகை பறிப்பு
/
கடையில் பெண்ணை தாக்கிஐந்தரை பவுன் நகை பறிப்பு
ADDED : ஏப் 23, 2025 01:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரச்சலுார்:அவல் பூந்துறை எரப்பம்பாளையத்தை சேர்ந்தவர் இந்திரா, 62; அதே பகுதியில் மளிகை கடை வைத்துள்ளார். நேற்று முன்தினம் மதியம் கடைக்கு வந்த, 30 வயது மதிக்கத்தக்க நபர், சிகரெட் கேட்டுள்ளார்.
சிகரெட் எடுக்க இந்திரா திரும்பியபோது, கட்டையால் இந்திராவின் பின் தலையில் தாக்கி, கழுத்திலிருந்த ஐந்தரை பவுன் தங்க செயினை பறித்து, வாலிபர் பைக்கில் தப்பி சென்றார். தலையில் அடிபட்ட இந்திரா தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். புகாரின்படி அரச்சலுார் போலீசார், நகை பறித்த கொள்ளையனை தேடி வருகின்றனர்.