ADDED : மார் 17, 2025 04:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெருந்துறை: திருப்பூர், மண்ணரை, ரோஜா நகரை சேர்ந்த சுந்தரம் மனைவி மூக்கம்மாள், 49; நேற்று முன்தினம் மாலை, தங்கை மகன் மதி-னேஷுடன் பைக்கில், பெருந்துறை அருகே சரளை பகுதியில் உள்ள உறவினரை பார்க்க வந்தார்.
பின்னர் இரவில் ஊருக்கு திரும்பினர். சரளை அருகில் செல்லும்போது, மூக்கம்மாள் சேலை பைக் பின் சக்கரத்தில் சிக்கியது. இதில் நிலை தடுமாறி விழுந்-ததில் பலத்த காயமடைந்தார். பெருந்துறை அரசு மருத்துவகல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும் வழியில் இறந்தார். இதுகுறித்து பெருந்துறை போலீசார் விசாரிக்கின்றனர்.