ADDED : அக் 03, 2025 01:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெருந்துறை,பெருந்துறையை அடுத்த காசிபில்லாம்பாளையத்தை சேர்ந்த சுப்பிரமணியம் மகள் சாந்தி, 46; சலவை தொழிலாளி. நேற்று முன்தினம் காலை இஸ்திரி பெட்டிக்கு, கரி போட்டு தீ வைத்துள்ளார்.
அப்போது தீ நன்றாக பிடிக்க மண்ணெண்ணெய் ஊற்றியபோது, அவர் மீதும் பட்டு உடையில் தீப்பிடித்தது. பலத்த காயத்துடன் ஈரோட்டில் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் இறந்தார். இதுகுறித்து பெருந்துறை போலீசார் விசாரிக்கின்றனர்.