ADDED : அக் 14, 2024 05:12 AM
தாராபுரம்: தாராபுரம் அருகே மின்சாரம் தாக்கி, பெண் தொழிலாளி பலி-யானார்.
தாராபுரத்தை அடுத்த காட்டம்பட்டியை சேர்ந்த தங்கவேல் மனைவி சிவகாமி, 45; நேற்று முன்தினம் அப்பகுதியில் உள்ள தோட்டத்துக்கு வேலைக்கு சென்றார். அங்கு மின் மோட்டாரை, இயக்க முயற்சி செய்தார். அப்போது எதிர்பாராத விதமாக மின்-சாரம் பாய்ந்ததில் துாக்கி வீசப்பட்டார்.
அக்கம்பக்கத்தினர் மீட்டு தாராபுரம் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேல் சிகிச்சைக்காக தாராபுரம் அரசு மருத்-துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிவகாமி இறந்தார். இதுகு-றித்த புகாரின்படி, அலங்கியம் போலீசார் விசாரிக்கின்றனர். தீப்பிடித்த ஆம்னி வேன்
சத்தியமங்கலம், அக். 14-
பவானிசாகர் அருகேயுள்ள கொத்தமங்கலத்தை சேர்ந்தவர் சிவ-சக்தி, 30; ஆம்னி வேன் டிரைவர் தொட்டம்பாளையம் பகுதியி-லிருந்து நோயாளி ஒருவரை ஏற்றிக்கொண்டு, சத்தி-கோபி சாலை-யிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு நேற்று மாலை அழைத்து வந்தார்.
சிகிச்சை முடிந்து மீண்டும் வாகனத்தை எடுக்கும் போது திடீ-ரென தீப்பிடித்தது. தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர். அதிர்ஷ்-டவசமாக யாருக்கும் எந்தவித பாதிப்பும் இல்லை.