ADDED : அக் 20, 2026 01:46 AM
அ நிறம் | அளவு
பவானி: பவானியை அடுத்த அய்யன்வலசை சேர்ந்தவர் வசந்தி, 35, திருமணம் ஆகாதவர். பெருந்துறையில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்தார்.
நேற்று முன்தினம் வேலைக்கு செல்ல, உறவினர் இசாந்த்குமாருடன் டூவீலரில் ஆப்பக்கூடல் பஸ் ஸ்டாப்புக்கு வந்தார். அப்போது கே-3 அரசு டவுன் பஸ் கிளம்பி விட்டதால், பஸ்ஸை பிடிக்க இசாந்த்குமார் பஸ்ஸை முந்தி செல்ல முயன்றபோது, சென்டர் மீடியன் அருகே நின்றுகொண்டிருந்தவரின் மீது பைக் மோதி நிலை தடுமாறியதில், வசந்தி சாலையில் விழுந்தார். பலத்த காயமடைந்த நிலையில் அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவ பரிசோதனையில் ஏற்கனவே இறந்து விட்டது தெரிய வந்தது. ஆப்பக்கூடல் போலீசார் விசாரிக்கின்றனர்.
