UPDATED : அக் 20, 2026 03:28 AM
ADDED : அக் 20, 2026 01:47 AM

ஈரோடு: ஆயுத பூஜையன்று வழக்கமாக பெரும்பாலான நிறுவனங்கள், கடைகள் உள்ளிட்டவற்றில் பூஜை போட்ட பின் கடையை மூடி செல்வது வழக்கம். ஆனால் இந்தாண்டு ஆயுதபூஜை திங்கள்கிழமையான நேற்று கொண்டாடப்பட்டது. ஈரோடு மாநகரில் வாரந்தோறும் திங்கள் மாலை துவங்கி செவ்வாய் காலை வரை ஜவுளி சந்தை நடக்கும்.
தீபாவளி பண்டிகை நெருங்கும் சூழலில் பிற மாவட்ட, பிற மாநில மொத்த, சில்லரை வியாபாரிகளை, வாடிக்கையாளர்களை எதிர்பார்த்து, ஆயுதபூஜை தினமாக இருந்தாலும், டி.வி.எஸ்.வீதி, ஈஸ்வரன் கோவில் வீதியில் அனைத்து மொத்த, சில்லரை ஜவுளி கடைகளும் நேற்று திறந்திருந்தன. காலை முதல் நள்ளிரவு வரை வழக்கம்போல் கடைகள் திறந்து இருக்கும். ஆயுத பூஜையை முன்னிட்டு விடுமுறை இல்லை. சந்தை நாள் என்பதால் வாடிக்கையாளர், வியாபாரிகள் ஏமாற்றத்தை தவிர்க்க கடை செயல்படும் என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.
