ADDED : அக் 20, 2026 01:47 AM
அ நிறம் | அளவு
ஈரோடு: ஈரோடு மாநகரில் ஆயுதபூஜை விழா நேற்று களை கட்டியது. நிறுவனங்கள், அலுவலகங்கள், வாகன ஸ்டாண்டுகளில் வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது.
ஈரோடு பெரிய மாரியம்மன் கோவில் அருகில் உள்ள பி.எஸ்.பார்க் ஆட்டோ ஸ்டேண்டில் ஓட்டுனர் மற்றும் உரிமையாளர் நலச்சங்கத்தின் சார்பில், 25க்கும் மேற்பட்ட ஆட்டோக்களை சுத்தம் செய்து பூ, மாலை மற்றும் வாழைக்கன்று கட்டி அலங்காரம் செய்து, கற்பூரம் ஏற்றி வழிபட்டனர். இதையடுத்து மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதேபோல் மத்திய பஸ் ஸ்டாண்ட், ஆர்.கே.வி.ரோடு உட்பட மாநகரில் பல்வேறு ஆட்டோ ஸ்டேண்டுகளிலும் ஆயுத பூஜை கொண்டாட்டம் களை கட்டியது. இதேபோல் அலுவலகங்கள், நிறுவனங்கள், சிறு கடைகளிலும் ஆயுதபூஜை கொண்டாடப்பட்டது.
