ADDED : செப் 06, 2026 05:41 AM
அ நிறம் | அளவு
புன்செய்புளியம்பட்டி:புன்செய்
புளியம்பட்டியை அடுத்த புஜங்கனுாரை சேர்ந்த கூலி தொழிலாளி
சக்திவேல், 45; இவரது மனைவி துளசி மணி, 37; தம்பதிக்கு ஆண், பெண்
குழந்தைகள் உள்ளனர். பனியன் நிறுவனத்தில் துளசிமணி வேலை செய்து
வந்தார். கடந்த, 1ம் தேதி வீட்டில் விறகு அடுப்பில் சமையல் செய்தார்.
அப்போது
விறகு நன்றாக எரிய மண்ணெண்ணெய் ஊற்றியபோது, சேலையில்
தீப்பிடித்தது. உடல் முழுவதும் தீக்காயம் அடைந்தநிலையில், கோவை
அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிகிச்சை பெற்று வந்த
நிலையில் துளசிமணி நேற்று காலை இறந்தார். புன்செய் புளியம்பட்டி
போலீசார் விசாரிக்கின்றனர்.
