ADDED : செப் 16, 2025 02:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சத்தியமங்கலம் சத்தியமங்கலம் அருகே குழந்தையுடன் பெண் மாயமனார்.சத்தியமங்கலம் அடுத்த கோணமூலை என்.ஜி.,புதுாரை சேர்ந்தவர் மாணிக்கம், கூலி தொழிலாளி. இவருக்கும், ஸ்ரீ தேவி என்பவருக்கும் திருமணமாகி, 4 வயதில் பெண் குழந்தை உள்ளது.
கடந்த செப், 4ம் தேதி கோவை சென்று தாயை பார்த்து விட்டு வருவதாக சென்றார். மறுநாள் தொடர்பு கொண்ட போது தாய் வீட்டில் இருப்பதாக கூறி விட்டு, மொபைல்போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டார். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. காணாமல் போன மனைவி, குழந்தையை கண்டுபிடித்து தரக்கோரி, சத்தியமங்கலம் போலீசில் நேற்று முன்தினம் மாணிக்கம் புகாரளித்தார்.