/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பி.ஏ.பி., வாய்க்காலில் பெண் சடலம் மீட்பு
/
பி.ஏ.பி., வாய்க்காலில் பெண் சடலம் மீட்பு
ADDED : செப் 05, 2025 01:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காங்கேயம், ஊதியூர் அருகே வஞ்சிபாளையம் பகுதியில் செல்லும் பி.ஏ.பி., வாய்க்காலில் பெண் சடலம் மிதந்து வந்தது. அப்பகுதி மக்கள் தகவலின்படி சென்ற ஊதியூர் போலீசார் உடலை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்தனர்.
இதில் காமநாயக்கன்பாளையம், கல்லிப்பாளையத்தை சேர்ந்த பழனிச்சாமி மனைவி பூங்கொடி, 39, என தெரிந்தது. அதே பகுதியில் ஒரு தோட்டத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் வாய்க்காலில் சடலமாக மிதந்து வந்துள்ளார். கொலை செய்து வீசப்பட்டாரா அல்லது குடும்ப பிரச்னையில் வாய்க்காலில் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா என்பது குறித்து, போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.