ADDED : ஜூலை 30, 2026 01:29 AM
தாராபுரம்: தாராபுரத்தில், இளம் பெண் வரதட்சணை கொடுமையால் தற்-கொலை செய்ததாக கூறி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்-டனர்.
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அடுத்த தொப்பம்பட்டியை சேர்ந்த கந்தசாமி மனைவி ரஞ்சிதா, 32. நேற்று முன்தினம் இவர் தனது வீட்டில், சேலையால் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில், நேற்று தாராபுரம் போலீஸ் ஸ்டேஷன் முன் குவிந்த அவரது உறவினர்கள், ரஞ்சிதாவின் சாவில் மர்மம் இருப்-பதாகவும், வரதட்சணை கொடுமையால் அவர் இறந்திருக்கலாம் என கூறி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், சில நிமி-டங்கள் அப்
பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உடனடியாக அங்கு வந்த போலீசார், மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். கந்த
சாமி குடும்பத்தினருக்கு ஆதரவாக, போலீசார் நடப்பதாக, ரஞ்சி-தாவின் உறவினர்கள் கூறியதால், அங்கு பதட்டமான சூழ்நிலை காணப்பட்டது.
