தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ குடிநீர் கேட்டு பெண்கள் மறியல்

குடிநீர் கேட்டு பெண்கள் மறியல்

குடிநீர் கேட்டு பெண்கள் மறியல்


ADDED : ஜன 23, 2026 04:43 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 23, 2026 04:43 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புளியம்பட்டி:புன்செய்புளியம்பட்டியை அடுத்த காவிலிபாளையம் பஞ்., கருப்-பராயன் கோவில் பகுதியில், 500க்கும் மேற்பட்டோர் வசிக்கின்-றனர். இவர்களுக்கு பவானிசாகர் அணையிலிருந்து குடிநீர் வினி-யோகம் செய்யப்படுகிறது.

கடந்த, 10 நாட்களுக்கும் மேலாக சரிவர குடிநீர் வினியோகம் செய்யவில்லை. இதனால் குடிநீரின்றி அவதிக்கு ஆளாகினர். ஆவேசமடைந்த பெண்கள் குடிநீர் முறையாக வழங்க கோரி, புன்செய்புளியம்பட்டி-காவிலிபாளையம் சாலையில், காலி குடங்களுடன் நேற்று காலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் வாகனங்கள் மேற்கொண்டு செல்லமுடியாமல் நின்றன. புன்-செய்புளியம்பட்டி போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியும் சமா-தானம் அடையாமல் மறியலை தொடர்ந்தனர். வி.ஏ.ஓ., பேச்சு-வார்த்தை நடத்தினார்.'அடிக்கடி குடிநீர் குழாய் உடைகிறது. பிரச்னையை சரி செய்து முறையாக குடிநீர் வழங்க வேண்டும், அப்போதுதான் இங்கி-ருந்து செல்வோம்' என்று, அவரிடம் பலத்த வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறவே. மறியலை கைவிட்டனர். மறியலால், அரை மணி நேரம் போக்குவரத்து பாதித்தது

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us