தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ குடிநீர் கேட்டு பெண்கள் மறியல்

குடிநீர் கேட்டு பெண்கள் மறியல்

குடிநீர் கேட்டு பெண்கள் மறியல்


ADDED : ஜூலை 24, 2026 05:52 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 24, 2026 05:52 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புன்செய்புளியம்பட்டி:புன்செய் புளியம்பட்டி அடுத்த பனையம்பள்ளி பஞ்., சின்ன பருசாபாளையம் கிராமத்தில், 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இவர்களுக்கு பவானிசாகர் அணை கூட்டு குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது.

இரண்டு வாரத்துக்கும் மேலாக சரிவர குடிநீர் வினியோகம் செய்யாததால், அவதிக்கு ஆளாகினர். இதனால்ஆவேசமடைந்த பெண்கள், புளியம்பட்டி-பவானிசாகர் சாலை பனையம்பள்ளி பஸ் நிறுத்தத்தில் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் வாகனங்கள் மேற்கொண்டு செல்லமுடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. புளியம்பட்டி இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் தலைமையிலான போலீசார், மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

குடிநீர் வடிகால் வாரியம் குறைவான குடிநீர் சப்ளை செய்வதால் சீரான வினியோகம் தடை படுவதாகவும், விரைவில் சரி செய்யப்பட்டு சீராக வழங்கப்படும் என்று உறுதி கூறவே மறியலை கைவிட்டனர். மறியலால் அரை மணி நேரம்

போக்குவரத்து பாதித்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us