/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பம் வினியோகம்
/
மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பம் வினியோகம்
ADDED : ஜூலை 08, 2025 01:13 AM
ஈரோடு, தமிழகத்தில் பெண்களுக்கு மாதம், 1,000 ரூபாய் உரிமைத்தொகை, 1.15 கோடி பேருக்கு வழங்கும் நிலையில், இரண்டாம் கட்டமாக நேற்று முதல் அதற்கான விண்ணப்பம் வழங்கும் பணி துவங்கி உள்ளது. ஈரோடு மாவட்டத்தில் மாநகராட்சியில் முதல் மண்டல அலுவலகத்திலும், பவானி நகராட்சியில் இரு வார்டுகளில் வழங்கப்படுகிறது.
இன்று மேலும் ஆறு இடங்களிலும், அடுத்து அனைத்து பகுதிகளிலும் வழங்கப்படும். விண்ணப்பங்கள் வழங்கி முடித்த பின், 15ம் தேதி முதல் திரும்ப பெறும் முகாம் துவங்கும். முகாம் நடக்கும் இடங்கள் அறிவிக்கப்படும். அங்கும் விண்ணப்பங்களை வழங்கி, அங்கேயே பூர்த்தி செய்தும் பெறப்படும். அக்., மாதம் வரை விண்ணப்பங்கள் பெறப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.