/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மாற்றுத்திறனாளிகள் 40 பேருக்கு பணி
/
மாற்றுத்திறனாளிகள் 40 பேருக்கு பணி
ADDED : செப் 25, 2024 07:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் நேற்று நடந்தது. இதில், 135 மாற்றுத்திறனாளிகள் பங்கேற்றதில், 40 பேருக்கு, பணியாணை வழங்கப்பட்டது.
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக உதவி இயக்குனர் ராதிகா, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பூபதி, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் சாந்தி உட்பட பலர் பங்கேற்றனர்.